சங்கராபுரத்தில்அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம்
சங்கராபுரத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் சங்கராபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் சக்கரவர்த்தி, சர்புதீன், ஜெயினுலாப்தீன், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் குசேலன் வரவேற்றார்.
புதிதாக உதயமான வாணாபுரம் தாலுகாவில் இணைத்த வடபொன்பரப்பி குறுவட்டத்தை மீண்டும் சங்கராபுரம் தாலுகாவுடன் இணைக்க கோரி நடந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், சங்கராபுரத்தில் எடையளவு முத்திரை முகாம் நடைபெற்று வருகிறது. இதை வணிகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகள் அறிவுறுத்தினர். இதில் நிர்வாகிகள் சாதிக்பாஷா, நூர்தீன், கவுஸ், செல்வம், ஜெயக்குமார், குப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.