பள்ளிகொண்டா வாரச்சந்தையை மேம்படுத்த ரூ.1¼ கோடி ஒதுக்கீடு


பள்ளிகொண்டா வாரச்சந்தையை மேம்படுத்த ரூ.1¼ கோடி ஒதுக்கீடு
x

பள்ளிகொண்டா வாரச்சந்தையை மேம்படுத்த ரூ.1¼ கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக பேரூராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வேலூர்

பள்ளிகொண்டா பேரூராட்சி கூட்டம் நேற்று மாலை நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் சுப்பிரியா குமரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வசீம்அக்ரம், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சந்தோஷ் தீர்மானங்களை வாசித்தார்.

பள்ளிகொண்டா பேரூராட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் மண் தரையாக உள்ளது. மேலும் மேற்கூரை இல்லாமல் மழைக் காலங்களில் மழையில் நனைந்தபடியே வியாபாரிகள் வியாபாரம் செய்கிறார்கள். இதனை சரிசெய்ய கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், வார்டுகளில் சேரும் குப்பைகளை எடுத்துச் செல்ல 6 பேட்டரி வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.9.30 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், ஐந்து வார்டுகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க ரூ.16 லட்சம் ஒதுக்கி இருப்பதாகவும் பேரூராட்சி மன்ற தலைவர் சுப்பிரியா குமரன் தெரிவித்தார்.

வார்டுகளில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களிலும் நீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். முடிவில் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பழனி நன்றி கூறினார்.


Next Story