பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ரூ.17 லட்சம் ஒதுக்கீடு


பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ரூ.17 லட்சம் ஒதுக்கீடு
x

பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ரூ.17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

காஞ்சிபுரம்

பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒன்றிய குழு தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் குடிநீர், சாலை, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதி பணிகளை விரைந்து முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் இயங்கி வரும் தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள சமையலறை கட்டிடங்களை பழுது பார்க்கும் பணிகளுக்காக ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.9 லட்சத்து 20 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கருணாகரச்சேரி ஊராட்சியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு 15-வது நிதிக்குழு மாநிய நிதியிலிருந்து ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளை அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி வசம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story