சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.585 லட்சம் ஒதுக்கீடு


சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.585 லட்சம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.585 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்:

கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் மூலம் 2023-24-ம் ஆண்டிற்கான திட்டங்கள் தோட்டப்பாடி, பெத்தாசமுத்திரம், ராயப்பனூர், நமச்சிவாயபுரம்,

கனியாமூர், தொட்டியம், தென்செட்டியநந்தல், எலியத்தூர், கடத்தூர், குதிரைச்சந்தல் ஆகிய கிராமங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மேலும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு 700 ஹெக்டர் பரப்பில் ரூ.585 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சிறுகுறு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 855 மானியமும், பெரிய விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 530 மானியமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் பசுமை குடில் அமைப்பதற்கு 1000 சதுரமீட்டர் பரப்பிற்கும், குளிர் பதன கிடங்கு அமைப்பதற்கு 100 மெட்ரிக் டன் அளவிற்கும் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மானியம்

இந்த திட்டக்களை மானியத்தில் பெறுவதற்கு, தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், வரைபடம், ஆதார் நகல், குடும்ப அட்டைநகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்துப்பயன் பெறலாம்.

மேலும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் திட்டங்களை

https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையத்தளத்தில் மற்றும் உழவன்செயலில் பதிவு செய்து பயன்பெறலாம். இந்தத் தகவலை தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story