குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.6.82 கோடி நிதி ஒதுக்கீடு- மாவட்ட ஊராட்சிக்குழு தீர்மானம்
குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.6.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.6.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை காந்திநகரில் உள்ள ஒரு தனியார் கூட்டரங்கில் மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரண குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதிசீனுவாசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாரதிராமஜெயம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் ஜி.ரவிச்சந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் இல.சரவணன் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், சாந்திகண்ணன், கோவிந்தராஜ், கே.ஆர்.தவமணி, உள்பட ஊராட்சி உறுப்பினர்கள், புள்ளியல் அலுவலர் சரவணன், உதவியாளர் எஸ்.சுந்தரமூர்த்தி, கணினி உதவியாளர் கே.ஸ்ரீதரன், உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டிற்கான 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ் குடிநீர், சுகாதாரம் இணைப்பு சாலை, பேவர் பிளாக் சாலை, மயானமேம்பாட்டு வசதிகள், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், நூலகங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், காத்திருப்புக்கூடங்கள், நெற்களம் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.6.82 கோடி மதிப்பில் பணிகள்நடக்கிறது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் ஊரக உள்ளாட்சி துறையில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி 15-வது மத்திய நிதிக்குழு மானியம் 2023-24-ம் ஆண்டிற்கு பணிபட்டியல் தேர்வு செய்யப்பட்டது. அத்துடன் வரவு செலவு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) மு.ரவிசந்திரன் நன்றி கூறினார்.