புதிய நாடக மேடை அமைக்க ரூ.7½ லட்சம் நிதி ஒதுக்கீடு


புதிய நாடக மேடை அமைக்க ரூ.7½ லட்சம் நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 11 April 2023 6:45 PM (Updated: 11 April 2023 6:47 PM)
t-max-icont-min-icon

புதிய நாடக மேடை அமைக்க ரூ.7½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள சாம்பகுளம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் காலனியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு புதிய நாடக மேடை அமைக்க கோரி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கோவிந்தம்மாள் அருண் பிரசாத் மற்றும் கிராம பொதுமக்கள், தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கதர் தொழில் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நாடக மேடை அமைக்க ரூ.7½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கோவிந்தம்மாள் அருண் பிரசாத் ஆகியோருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story