உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.71¼ கோடி ஒதுக்கீடு
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.71¼ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தொிவித்துள்ளாா்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை தொகுதியில் அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 10 சிறப்பு திட்டப் பணிகள் செய்ய முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வழங்கப்பட்டது. இதில் 6 சிறப்பு திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி உளுந்தூர்பேட்டை நகராட்சி பஸ் நிலையம் அமைக்க ரூ.25 கோடியும், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதியுடன் கூடிய கூடுதல் புதிய கட்டிடம் கட்ட ரூ.23 கோடியே 75 லட்சமும், உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் இணைப்பு சாலை அமைக்க ரூ.10 லட்சமும், புத்தனந்தல் அணைக்கட்டு நீர்ப்போக்கி சீர் செய்தல் மற்றும் 6 ஏரிகள் வாய்க்கால் தூர்வாரும் பணிக்காக ரூ.80 லட்சமும், திருநாவலூர் ஒன்றியம் உடையானந்தல் கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ,14 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் அரசூர் நத்தகுளம் மற்றும் ஆனத்தூர் குளத்தில் தடுப்பணை, மதகு சீரமைக்க ரூ.7 கோடியே 55 லட்சமும் என மொத்தம் ரூ.71 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறன் என்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.