சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு


சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 25 May 2023 12:30 AM IST (Updated: 25 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு

கோயம்புத்தூர்

வடவள்ளி

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் கண்காட்சியை தொடங்கி வைத்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.

சிறுதானிய கண்காட்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் கம்பு, கேழ்வரகு, ராகி, தினை உள்ளிட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதிய ரக சிறுதானியங்கள் அறிமுகம்

இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக அண்ணா அரங்கில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.இந்த கண்காட்சியில் பல்கலைக்கழக ஆராய்ச்சியால் உருவான புதிய ரக சிறுதானியங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த புதிய ரகங்களை பயன்படுத்தி லாபம் பெறலாம்.

ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு

சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க, விவசாயிகள் சிறுதானிய பயிர் சாகுபடி செய்வதற்கு ஆர்வமூட்டும் வகையில், தற்போது புதியரகங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்கள் தற்போது பயிரிடப்பட்டுள்ளது. இதனை அதிகரிக்க அரசு விவசாயிகளை ஊக்கு விக்கிறது.

சிறுதானியத்தில் 38.2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்ய இலக்குநிர்ணயித்துள்ளோம். அதிக லாபம், விளைச்சல் தரக்கூடிய சிறுதானியங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சிறுதானிய வளர்ச்சி, மற்றும் உற்பத்தியை அதிகரிக்க அரசு ரூ.82 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

கொள்கை முடிவு

பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் புதிய பயிற்சி மேற்கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. மாணவர்கள் தங்களது மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தென்ஆப்பிரிக்கா, கனடா, துபாய் போன்ற நாடுகளில் பயிற்சி பெற செல்கின்றனர். அங்கு உள்ள புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு பயில வாய்ப்பாக அமையும்.

தென்னை விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்வது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து அரசு முடிவு எடுக்கும். இது அரசின் கொள்கை முடிவு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story