கோவிலில் அன்னதானம்


கோவிலில் அன்னதானம்
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:16:14+05:30)

உடன்குடி பிசகுவிளையில் உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி பிசகுவிளை பகுதியில் உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் புதுப்பித்து கட்டப்பட்டு வரும் நிலையில் நிலைக்கால் விடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் மும்தாஜ்பேகம், முன்னாள் உறுப்பினர் சலீம் ஆகியோர் பங்கேற்று பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள் தர்மராஜ், கனகராஜ், ஆசிரியர் பாலகிருஷ்ணன், கோவில் நிர்வாகிகள் பாக்கியநாதன், சுயம்பு உள்பட ஊர்மக்கள் கலந்துகொண்டனர். இந்துக்களின் கோவில் விழாவில் முஸ்லிம் பேரூராட்சி உறுப்பினர் பங்கேற்று அன்னதானம் வழங்கிய நிகழ்வு மதநல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வாக கூறிய அப்பகுதி மக்கள் உறுப்பினர் மும்தாஜ்பேகத்தை பாராட்டினர்.


Next Story