கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம்
கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொழில் அதிபர் அய்யாத்துரை பாண்டியன் தொடங்கி வைத்தார்.
தென்காசி
தென்காசி:
தென்காசி அருகே உள்ள பால மார்த்தாண்டபுரம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவிலில் கொடை விழா நடைபெற்றது. மேலும் கீழப்பாவூர் மேலூர் பகுதியில் அமைந்துள்ள தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த இரண்டு இடங்களிலும் அய்யாத்துரை பாண்டியன் பேரவை சார்பில் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொழிலதிபர் அய்யாத்துரை பாண்டியன் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சங்கர், திரைப்பட இயக்குனர் பாரதி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அய்யாத்துரை பாண்டியன் பேரவை தலைவர் பழனிச்சாமி, ஊத்துமலை இளைய ஜமீன் குமரேசராஜா மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story