மாமல்லபுரத்திற்கு ஜி20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு புராதன சின்னங்களை சுற்றி காட்டும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் பயிற்சி
மாமல்லபுரத்தில் ஜி20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு புராதன சின்னங்களை சுற்றி காட்ட தேர்வு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசி வரலாற்று தகவல்களை எப்படி கூறவேண்டும் என்று சுற்றுலாத்துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ஜூன் 19-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்று நாளை (புதன்கிழமை) முடிவடையும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு விருந்தினர்கள் 120 பேர் நாளை மாலை 4 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, கண்டுகளிக்க வருகை தர உள்ளனர். இவர்களுக்கு மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பற்றி முழுமையாக சுற்றி காட்டி மகிழ்ச்சிபடுத்த மாமல்லபுரத்தை சேர்ந்த 10 சுற்றுலா வழிகாட்டிகளை சுற்றுலாத்துறை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து தே்ாவு செய்யப்பட்ட 10 சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் மாமல்லபுரம் வரலாற்று தகவல்களை புள்ளி விவரங்களுடன் கூறி வெளிநாட்டு விருந்தினர்களுக்கு எப்படி சுற்றி காட்டுவது என்பது குறித்து தேர்வு செய்யப்பட்ட அந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் நேற்று மாமல்லபுரம் சுற்றுலா அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு சுற்றுலா அலுவலர் த.சக்திவேல் தலைமையில் நடந்தது. மாமல்லபுரம் மூத்த சுற்றுலா வழிகாட்டிகள் எம்.கே.சீனிவாசன், பி.லட்சுமணன், வ.பாலன், மல்லை எம்.சிவா, என்.யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பல்லவர் கால வரலாற்று தகவல்களை பிழையில்லாமல் கூறி எப்படி சுற்றி காட்டுவது என்பது குறித்தும், ஆங்கிலத்தில் சுவாரசியமாக அவர்களுக்கு பாரம்பரிய சிற்பங்கள் பற்றிய தகவல்களை எப்படி கூறி எந்த மாதியான முறையில் புராதன மையங்களில் சுற்றி காட்டுவது என்பது குறித்து சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் 2 மணி நேரம் பயிற்சி அளித்தார். பிறகு வரலாற்று தகவல்களை எப்படி ஆங்கிலத்தில் பிழையில்லாமல் சரளமாக பேசுவது குறித்து ஒவ்வொரு சுற்றுலா வழிகாட்டிகளிடம் ஒத்திகையும் நடத்தப்பட்டது. மேலும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு சுற்றி காட்டும்போது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் வேட்டி-சட்டை அணிந்து வர வேண்டும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு இப்பயிற்சி கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. பிறகு சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ஒவ்வொரு சிற்பங்களில் முழு குறிப்புகள் அடங்கிய வராலற்று தகவல்கள் அடங்கிய குறிப்பு கையேடுகளும் வழங்கப்பட்டன.