அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்


அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
x
தினத்தந்தி 15 Aug 2023 4:30 AM IST (Updated: 15 Aug 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டியில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க. வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டியில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அதன்படி நத்தம் ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சியை சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் பழனிமலை, ராஜா, பாலு உள்ளிட்டோர் அந்த கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க. வில் தங்களை இணைத்து கொண்டனர்.

இதேபோல் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான காமனூர் ஊராட்சியை சேர்ந்த தி.மு.க. மற்றும் மாற்றுக்கட்சியை சேர்ந்த கிருஷ்ணகுமாரி, சுரேஷ்குமார், முருகன், கண்ணன், காளீஸ்வரி ஆகியோர் முன்னாள் அமைச்சர் விசுவநாதன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளரும், நத்தம் ஒன்றியக்குழு தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன், கொடைக்கானல் கீழ்மலை ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story