மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள ஆலம்பட்டி தெற்கு தெரு உச்சி மகாகாளியம்மன் கோவில் கொடை விழாவில் நேற்று சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தாமோதரன் அலுவலகத்தில் காமநாயக்கன்பட்டியை சேர்ந்த பிற கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் காமநாயக்கன்பட்டியை சேர்ந்த மரிய ஜேசுராஜ், குமார், சூசை பிரான்சிஸ் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா, கோவில்பட்டி யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, மாவட்ட மாணவர் அணி துணை தலைவர் செல்வகுமார், நகரசபை கவுன்சிலர் கவியரசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.