மாற்று கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்
நெல்லையில் மாற்று கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் புதிதாக 25-க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் தயாசங்கர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். தாழையூத்து ஆப்பிள் பள்ளி தாளாளர் ரூபிநாத், கரையிருப்பு அ.ம.மு.க ஆறுமுகம், தொழில் அதிபர் முத்துக்கிருஷ்ணன் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் எம்.பி.நாகராஜன், நிர்வாகிகள் கருப்பசாமி, குருமகாராஜன், வி.பி.முத்து, குமார், சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story