மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்


மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்
x

நெல்லையில் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

திருநெல்வேலி

நெல்லை:

அம்பை ஒன்றியம் பிரம்மதேசம் பஞ்சாயத்து கவுதமபுரி தே.மு.தி.க. கிளை செயலாளர் ராஜதுரை தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சுமார் 25 பேர் தே.மு.தி.க.வில் இருந்து விலகி, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர், மாவட்ட கவுன்சிலர் அருண் தபசு பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story