மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்
சங்கரன்கோவிலில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
சங்கரன்கோவில்:
நெல்லை தனி நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், வாசுதேவநல்லூர் யூனியன் கவுன்சிலருமான, தலைவன்கோட்டை விஜயபாண்டியன் தலைமையில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத்தில் உள்ள கிராமமான தலைவன் கோட்டை, ஈச்சம்பொட்டல்புதூர், நொச்சிகுளம், ஆண்டார்குளம், வடமலாபுரம், நகரம் துரைச்சாமிபுரம், முள்ளிக்குளம், தாருகாபுரம் பாறைப்பட்டி நெல்கட்டும் செவல், பச்சேரி, அரியூர், கீழப்புதூர் சங்கனாப்பேரி, மலையடிக்குறிச்சி ஆகிய ஊர்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, நகரச் செயலாளர் பிரகாஷ், புளியங்குடி நகர செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.