வெள்ளாளப்பட்டி அரசு பள்ளியில் படித்தமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


வெள்ளாளப்பட்டி அரசு பள்ளியில் படித்தமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
x
சேலம்

கருப்பூர்

சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1985-1986-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பள்ளியில் முதன்முறையாக மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு பத்தாம் வகுப்பு முதல் பேட்ச் 40 மாணவர்கள், 20 மாணவிகள் படித்தனர்.

இவர்கள் தற்போது மத்திய மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 37 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் சந்தித்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் குடும்பத்தினருடன் சந்தித்து பள்ளி வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் குடும்பத்தினர் அறிமுகம் செய்து செய்து கொண்டனர். தொடர்ந்து தங்களுக்கு பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர்களுக்கு சால்வை மரியாதை செய்தனர். பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் தரைத்தளம், மற்றும் 10 கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டது. இதை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரஹ்மது உசேன் மற்றும் முன்னாள் மாணவர்கள் ரவிச்சந்திரன், ரகுபதி, செல்வராஜ், சரவணன், அன்பழகன், வடிவேல், சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story