முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

திசையன்விளை அருகே இடையன்குடி கால்டுவெல் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளியில் 1997-ம் ஆண்டு 10, 12-ம் வகுப்பு படித்த மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது குடும்பத்துடன் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளி மற்றும் வகுப்பறைகளை பார்வையிட்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு சேகரகுரு பர்னபாஸ் தலைமை தாங்கினார் பழைய மாணவர் தாமஸ் வரவேற்று பேசினார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

முன்னாள் ஆசிரியர்களுடன், பழைய மாணவர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். முடிவில், முன்னாள் மாணவர் ரத்தினசபாபதி நன்றி கூறினார்.

1 More update

Next Story