சாயர்புரம் போப் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சாயர்புரம் போப் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சாயர்புரம்:
சாயர்புரம் போப் கல்லூரியில் பொருளாதாரத்துறையின் 18-வது முன்னாள் மாணவர் சங்க சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இம்மானுவேல் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவரும், பழனியப்பபுரம் குருவானவருமான ஜெய்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். அதனைத் தொடர்ந்து பொருளாதாரத் துறை தலைவர் பேராசிரியர் செல்வகுமார் வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் பேராசிரியர் ஜான் வெள்ளக்கண். வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான வால்பாறை விஸ்பரிங் பால்ஸ் ரெசார்ட் பொருளாதாரத் துறை முன்னாள் மாணவருமான ஜெபராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவ, மாணவியர் தங்களது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்களும் போப் கல்லூரியின் பொருளாதார துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். விழாவில் முன்னாள் துறை தலைவர்கள் ஆனந்த வேதா, ஜெயசிங், பேராசிரியர்கள் சாலமோன் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் பொன்னுசாமி நன்றி கூறினார்.