முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
உபதலை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி
குன்னூர்
குன்னூர் அருகே உபதலை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் பணிபுரிகின்றனர். முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. முன்னாள் மாணவர்களை இந்நாள் மாணவர்கள் பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் வரவேற்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஆசிரியர்களை சந்தித்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக துணை நிற்போம் என உறுதி ஏற்றனர். தற்போது பயிலும் மாணவர்கள் முன்னாள் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். பின்னர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story