முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே செஞ்சேரிமலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராம சாமி அடிகளார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பேசும்போது, வாட்ஸ்-அப் குழு மூலம் முன்னாள் மாணவர்களை இணைக்க முடிந்தது. அனைவரும் சேர்ந்து பள்ளி வளர்ச்சிக்கு ரூ.50 அயிரம் வழங்க உள்ளோம். ஆண்டுதோறும் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளோம் என்றனர்.
முன்னதாக முன்னாள் மாணவர்கள் தாங்கள் பள்ளியில் பயின்ற காலத்தில் வகுப்பறையில் நடந்த சுவராசியமான சம்பவங்கள், ஆசிரியர்கள் பாடம் நடத்திய விதம், தற்போதைய வேலை, குடும்ப நிலை குறித்து ஒருவருக்கொருவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த முன்னாள் ஆசிரியர்களுக்கு நன்றி கூறினர்.