முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
x

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 1993-1997-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல் மற்றும் முன்னாள் மாணவ சங்க ஒருங்கிணைப்பாளர் கே.ஜி.சீனிவாசகன் ஆகியோர் பேசினார்கள்.

அமெரிக்காவில் திட்ட மேலாண்மை ஆலோசகராக பணிபுரியும் கல்லூரியின் முன்னாள் மாணவர் எஸ்.சைலேஷ்வரன் வரவேற்று பேசினார். கல்லூரி முன்னாள் மாணவர்கள், கல்லூரி தாளாளர், இயக்குனர், முதல்வர் மற்றும் துறை பேராசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்கள். முன்னாள் மாணவர்கள் தங்களின் நினைவாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினார்கள். மேலும் அனைவரும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கோவை, மெட்ரிக்ஸ் மீடியா புரோடக்சன் நிறுவனர் ஆனந்த் டாகா மற்றும் குழுவினர் தயாரித்த `கல்வித்தந்தை கே.ராமசாமி வாழ்க்கை வரலாற்று' குறும்படம் வெளியிடப்பட்டது.

கல்லூரியில் பயிலும் நன்கு படிக்கும் ஒரு ஏழை மாணவனுக்கு 3 ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தை ஏற்றுக் கொள்வதாக கூறி முதலில் ஓர் ஆண்டுக்கான கல்வி கட்டணம் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கல்லூரி முதல்வரிடம் முன்னாள் மாணவர்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளிலும் சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களிலும் பணிபுரியும் 180-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். சென்னை, டெக் மஹிந்திரா நிறுவனத்தின் டெலிவரி மேலாளர் விவேக்.எஸ்.மஹாதேவன் நன்றி கூறினார்.


Next Story