முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ஸ்ரீவரத வேங்கடரமண பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தேனி
தேனி அருகே வெங்கடாசலபுரத்தில் உள்ள ஸ்ரீ வரதவேங்கடரமண மேல்நிலைப்பள்ளியில், 1989- 1994-ம் ஆண்டு காலகட்டத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வீரபாண்டியில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் மாணவர்கள் பலர் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தங்களுக்கு பயிற்றுவித்த கணித ஆசிரியரான காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜோதிராமை அழைத்து அவரை கவுரவித்தனர்.
பின்னர் முன்னாள் மாணவர்கள் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர். இதையடுத்து அவர்கள் தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை இதுபோன்ற சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது என்று அவர்கள் முடிவு செய்தனர்.
Related Tags :
Next Story