தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வள்ளியூர் (தெற்கு):
தெற்கு கள்ளிகுளம் தடசணமாற நாடார் சங்க கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 1994-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டுவரை இக்கல்லூரியில் வரலாற்றுத்துறையில் பயின்ற மாணவ-மாணவிகள் 60 பேர் சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தனர். அவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ராமநாதன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராஜன் வரவேற்று பேசினார். கல்லூரியின் முன்னாள் வரலாற்றுத்துறை தலைவர்கள் ஆலிவர் சாம், கலைச்செல்வன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் பாலசரஸ்வதி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் நடேசன், முன்னாள் துறைத்தலைவர் கில்பர்ட், முன்னாள் மாணவி சாந்தா ஆகியோரின் உருவப்படங்கள் திறப்பு மற்றும் அறக்கட்டளை நிறுவுதலும், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை பாசப்பறவைகள் நண்பர்கள் குழுத்தலைவர் சாத்தை செல்வக்குமார், ஆசிரியர் சிவகளை மாணிக்கம் செய்திருந்தனர்.