கம்பைநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கம்பைநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1996-ம் ஆண்டு 12-ம் வகுப்பில் வரலாறு, தொழில் கல்வி பிரிவு, கணிதம், அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து தங்கள் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு 1996-ம் கல்வியாண்டில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த ஸ்ரீராமுலு தலைமை தாங்கினார்.
ஆசிரியர்கள் வெங்கட்ராமன், லட்சுமி நாராயணன், ராஜாமணி, சண்முகம் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன் கலந்துகொண்டு பேசினார். முடிவில் முன்னாள் மாணவர்கள் நன்றி கூறி அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கி தாங்கள் படித்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள், நினைவுகள் ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி கொண்டனர். இது போன்ற நிகழ்ச்சி தொடர்ந்து இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது.