25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
x

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு

இதில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் வேலை செய்து வந்த பல முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் தங்களுடன் படித்த சக மாணவர்களிடம் கல்லூரி நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். தற்போது எந்தெந்த துறைகளில் பணிபுரிந்து வருகிறார்கள் என்று கூறி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசும், கேடயமும் வழங்கி கவுரவித்தனர். இதில் வேதகிரீஸ்வரர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஆனூர் ஜெகதீசன், பொருளாளர் கவுதம் சந்த், துணைத்தலைவர் மாதவன், செயலாளர் ஆடலரசு, இணைச்செயலாளர் கோபிநாதன், துணை செயலாளர் அருள் அன்பரசு, கல்லூரி முதல்வர் சாய் கிருஷ்ணன், முன்னாள் முதல்வர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர் அதனை தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர், கல்லூரி நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.


Next Story