முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
x

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியானது கடந்த 1972-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக இருந்தது. அப்போது அந்த பள்ளியில் படித்த எஸ்.எஸ்.எல்.சி. படித்த 45 பேர் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடினர். அங்கு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை நினைவு பரிசு வழங்கி பாராட்டுவது, ஏழை-எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு உறுதி அளித்தனர். முன்னதாக பேராசிரியர் கா.மனோகரன் வரவேற்றார். முடிவில் நாகராஜன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் பாஸ்கரன், சுப்பிரமணியன், கிருஷ்ணசாமி, மணிமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story