ஆமருவி பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்


ஆமருவி பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:45 PM GMT)

தேரழுந்தூர் ஆமருவி பெருமாள் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் 10-வது தலமான புகழ்பெற்ற ஆமருவி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேசிகர் உற்சவத்தையொட்டி பெருமாள் தெப்ப உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தேசிகர் உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் கோவில் குளத்தில் பெருமாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. நேற்று தேசிகர் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பெருமாள் மற்றும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜன் செய்திருந்தார். இதற்கான பாதுகாப்பு பணியில் குத்தாலம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.


Next Story