அம்பை கலைக்கல்லூரி ஆண்டு விழா


அம்பை கலைக்கல்லூரி ஆண்டு விழா
x

அம்பை கலைக்கல்லூரி ஆண்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை கலைக்கல்லூரி ஆண்டு விழா கல்லூரி அரங்கத்தில் நடந்தது. கல்லூரி செயலாளர் தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர்கள் ஆயிஷாள், தனலெட்சுமி, தங்கசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் தீபாலட்சுமி வரவேற்று பேசினார். கல்லூரியின் சுயநிதி பிரிவு இயக்குனர் வேலையா தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா ஆண்டறிக்கை வாசித்தார்.

முன்னாள் மாவட்ட நீதிபதி ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். கல்லூரிக்கு அனைத்து நாட்களும் வந்த மாணவ, மாணவிகளுக்கும், அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் இசக்கி நன்றி கூறினார்.


Next Story