அம்பை அரசு ஆஸ்பத்திரியில்இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு
அம்பை அரசு ஆஸ்பத்திரியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
அம்பை:
அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் ஊழியர் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அம்பை அரசு ஆஸ்பத்திரியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., சுகாதார பணிகள் இணை இயக்குனர் (நலவாழ்வு பொறுப்பு) ராமநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது டாக்டர்கள் சரியாக பணிக்கு வருகிறார்களா? என்று பதிவேட்டை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பின்னர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் ஏழை நோயாளிகளை நன்கு கவனிக்க வேண்டும், அவர்களிடம் லஞ்சம் வாங்க கூடாது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவ ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.
அ.தி.மு.க. அம்பை நகர செயலாளர் அறிவழகன், ஒன்றிய செயலாளர்கள் அம்பை துர்க்கை துரை, சேரை மாரிசெல்வம், மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.