அம்பை நகராட்சி பகுதியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு


அம்பை நகராட்சி பகுதியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு
x

அம்பை நகராட்சி பகுதியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை நகராட்சி பகுதிகளில் வாருகால் தூர்வாரவில்லை, தெரு விளக்குகள் போதிய வசதி இல்லை என பொதுமக்கள் பல்வேறு புகார்களை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அம்பை மறுகால் தெரு பகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீண்ட நாட்களுக்கு பின்பு தற்போது தான் வாறுகால் ஓடை அள்ளப்பட்டுள்ளதாகவும், அள்ளி வைத்தால் உடனடியாக அப்புறப்படுத்தப்படவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து ஊர்க்காடு பகுதிகளிலும் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அம்பை நகரச் செயலாளர் அறிவழகன், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கண்ணன், மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story