அம்பை புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் பொறுப்பேற்பு


அம்பை புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் பொறுப்பேற்பு
x

அம்பை புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருநெல்வேலி

அம்பை:

நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் பல்வீர் சிங். இவர் அம்பை உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய சம்பவம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக வெங்கடேசன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கோவை மாநகர உதவி போலீஸ் கமிஷனராக இருந்த சதீஷ்குமார், அம்பை துணை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று இரவு 8 மணி அளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது இங்கு பணியாற்றிய துணை சூப்பிரண்டு வெங்கடேசன், சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டாக மாறுதலாகி செல்கிறார்.


Next Story