அம்பேத்கர் பிறந்த நாள் விழா
சிவகங்கை மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பல்வேறு கட்சியினர் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பல்வேறு கட்சியினர் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கர் பிறந்தநாள்
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, கோபிநகர் செயலாளர் ராஜா, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் இளங்கோவன், நகர் அவை தலைவர் பாண்டி, நகர் துணை செயலாளர் மோகன் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தி.மு.க. சார்பில் நகர செயலாளரும், நகர சபை தலைவருமான துரை ஆனந்த் தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் குழு உறுப்பினர் வீனஸ் பூமிநாதன், மாவட்ட திராவிட கழக தலைவர் புகழேந்தி, காப்பாளர் வக்கீல் இன்பநாதன் உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கம்யூனிஸ்டு
இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமையில் நகர செயலாளர் மருது, மாவட்ட துணை செயலாளர் கோபால், நகர துணை செயலாளர் பாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னக்கருப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், ஒன்றிய செயலாளர் உலகநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், இளையான்குடி தாலுகா செயலாளர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
காரைக்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சர் தென்னவன், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, தி.மு.க. நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டையூர் ஆனந்த், காரைக்குடி கவுன்சிலர்கள் மலர்விழி பழனியப்பன், தெய்வானை இளமாறன், கலா காசிநாதன், முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் காரை சுரேஷ், ராகோஅரசு சரவணன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் மாங்குடி எம்.எல்.ஏ., நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன், கல்லல் ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன், நகர செயலாளர் குமரேசன், மாவட்ட செயலாளர்கள் சண்முகதாஸ், அப்பாவு ராமசாமி, மாத்தூர் ஊராட்சி தலைவர் காமராஜ், கவுன்சிலர் அமுதா மற்றும் பலர் மரியாதை செலுத்தினர். ஐக்கிய நாடுகள் அம்பேத்கர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மணிமுத்து, ம.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் சேதுதியாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார், மாநில துணை செயலாளர்கள் இளைய கவுதமன், பெரியசாமி, தளகாவூர் ஆறுமுகம், காரைக்குடி நகர செயலாளர் ரமேஷ், துணை செயலாளர் பாண்டியன், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி துணைச்செயலாளர் பள்ளத்தூர் பெரியசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மாரத்தான் போட்டி
அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தேர்போகி வி.பாண்டி, மாவட்ட பொருளாளர் லாரன்ஸ், காரைக்குடி தெற்கு நகர செயலாளர் கார்த்தி, இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர் சுமதி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் அழகர்சாமி ஆகியோர் மலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் ஐக்கிய நாடுகள் அம்பேத்கர் சங்கத்தின் சார்பில் மாரத்தான் போட்டி நடந்தது. இதனை காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.