அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு


அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2022 6:45 PM GMT (Updated: 6 Dec 2022 6:46 PM GMT)

தென்காசியில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

தென்காசி

அம்பேத்கர் நினைவு நாள் தென்காசியில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நன்னகரத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை, பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஷெரீப், முன்னாள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஷமீம் இப்ராஹிம் மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

* விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


Next Story