நீதிமன்றங்களில் அம்பேத்கர் சிலைகள், படங்களை அனுமதிக்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
நீதிமன்றங்களில் அம்பேத்கர் சிலைகள், படங்களை அனுமதிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான இடங்களில் அதை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் சிலைகளோ, படங்களோ இருப்பது எந்த வகையில் தவறு ஆகும்? எனவே நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் ஆகியோருடன் அண்ணல் அம்பேத்கரின் சிலைகள், உருவப்படங்களையும் அமைக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கையில், "நீதிமன்ற வளாகங்களில் சட்ட மேதை அம்பேத்கர் படத்தை வைக்கக்கூடாது என்ற ஐகோர்ட்டு பதிவாளரின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு நீதிமன்றங்களில் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று புரட்சி பாரதம் கட்சி தலைவர் எம்.ஜெகன் மூர்த்தி வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட சாதிய தலைவர், அரசியல் தலைவர் என்ற ஒரு கட்டத்துக்குள் அடைக்காமல் தேசிய தலைவர் என்ற அடிப்படையில் அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் அம்பேத்கரின் புகைப்படங்களை நிறுவவேண்டும் என்று கூறியுள்ளார்.