போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்


போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்
x

வாணியம்பாடியில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியது.

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக சி.எல்.ரோடு, காதர்பேட்டை, பஸ் நிலையம், மேட்டுப்பாளையம் சர்க்கிள் பகுதிகளில் தினசரி போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வாணியம்பாடி நியூ டவுன் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கிக்கொண்டது. சுமார் 15 நிமிடத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழியின்றி நின்றது. பின்னர் பொதுமக்களே போக்குவரத்தை சீர் செய்யும் நிலை ஏற்பட்டது.

வாணியம்பாடியில் போக்குவரத்தை சீர் செய்ய தனி போலீஸ் நிலையம் இருந்தும் கடந்த சில மாதங்களாக போக்குவரத்து போலீஸ் நிலையம் வாணியம்பாடியில் செயல்படுகிறதா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.


Next Story