தமிழ்நாட்டில் அமித்ஷாவின் எண்ணம் நிறைவேறாது - அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழ்நாட்டில் அமித்ஷா வின் எண்ணம் நிறைவேறாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி.
கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில் ,
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள யாத்திரை பாத யாத்திரை இல்லை பாவ யாத்திரைதான் . உள்நோக்கத்தோடு நடக்கும் இந்த யாத்திரை பாவ யாத்திரை தான். அதில் மாற்றுக்கருத்திற்கு இடமே இல்லை.திமுக வை விமர்சிக்க பா.ஜ.க., வினருக்கு எந்த தகுதியும் இல்லை. ஏனென்றால் இவர்கள் மக்களை ஒற்றுமைபடுத்த எந்த முயற்சியும் எடுத்தது இல்லை.
இவர்கள் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழர் நலனுக்கு எதிராக பேசுவதை வழக்கமாக கொண்டவர்கள். தமிழ்நாட்டில் அமித்ஷா வின் எண்ணம் நிறைவேறாது" என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார் .
Related Tags :
Next Story