"நாடாளுமன்ற தேர்தலில் அமமுக 40 தொகுதியிலும் போட்டியிடும்"- டிடிவி தினகரன்


நாடாளுமன்ற தேர்தலில் அமமுக 40 தொகுதியிலும் போட்டியிடும்- டிடிவி தினகரன்
x

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மன்னார்குடி,

காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து மன்னார்குடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது டிடிவி தினகரன் கூறியதாவது;

"காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதிய அழுத்தம் தரவில்லை. விலைவாசி உயர்வு மற்றும் காவிரி பிரச்சினையை திசை திருப்ப சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசி உள்ளார். சனாதானம் என்ற ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அமமுக 40 தொகுதிகளிலும் போட்டியிடும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story