ரேணுகாதேவி அம்மன் முகத்தில் வியர்த்ததாக பக்தர்கள் பரவசம்


ரேணுகாதேவி அம்மன் முகத்தில் வியர்த்ததாக பக்தர்கள் பரவசம்
x
திருப்பூர்


உடுமலை திருப்பதி கோவிலில் ஆண்டுதோறும் யுகாதிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ஆண்டில் யுகாதிப் பண்டிகையையொட்டி வரும் 22-ந்தேதி காலை 10 மணிக்கு ரேணுகாதேவி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.முன்னதாக கடந்த 8-ந்தேதி முதல் தினசரி புற்றுப்பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன்படி புற்று வடிவிலுள்ள ரேணுகாதேவிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. அவ்வாறு நடைபெற்ற பூஜையின் போது ரேணுகாதேவியின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை வடிந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர். இதனால் ஏராளமான பக்தர்கள் ஆவலுடன் வந்து வியர்வை வழியும் முகத்துடன் தரிசனம் தந்த ரேணுகாதேவி அம்மனை தரிசித்தனர். மக்களின் கஷ்டங்களை போக்கும் அம்மன் கோடை வெப்பத்தின் கடுமையை தனக்குள் வாங்கி காட்சி தருவதாக நம்பிக்கை தெரிவித்தனர்.


Next Story