பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அம்மன் சைக்கிளில் பயணம் - மாசி மகத்தில் சுவாரசியம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அம்மன் சைக்கிளில் பயணம் - மாசி மகத்தில் சுவாரசியம்
x

கடலூர் முதுநகர் சிப்பாய் தெருவில் உள்ள மணலூர் மாரியம்மன் கோவில் அம்மன் சிலை, சைக்கிளில் அமர வைத்து, மாட்டு வண்டியில் எடுத்துவரப்பட்டது.

கடலூர்,

மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரம் மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்று ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகளை அலங்கரித்து மினி லாரி, டிராக்டர், மாட்டு வண்டி போன்ற பல்வேறு வாகனங்களில் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வந்து தீர்த்தவாரி நடைபெறும்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்காக, சைக்கிளில் அம்மன் சிலை கொண்டுவரப்படது, பலரையும் கவனத்தையும் ஈர்த்தது. கடலூர் முதுநகர் சிப்பாய் தெருவில் உள்ள மணலூர் மாரியம்மன் கோவில் அம்மன் சிலை, சைக்கிளில் அமர வைத்து, மாட்டு வண்டியில் எடுத்துவரப்பட்டது.

அதில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அம்மன் சைக்கிள் பயணம் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story