கோவில்களில் அம்மன் சிறப்பு அலங்காரம்


மாசி திருவிழாவையொட்டி கோவில்களில் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

நாமக்கல்

குமாரபாளையம்

குமாரபாளையத்தில் மாசி திருவிழா எனப்படும் காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா வருகிற 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட மாரியம்மன் கோவில்களில் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி கோவில்களில் சாமி பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளிப்பார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வா். இதையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் சாமி கவுரி அம்மன் அலங்காரமும், தெலுங்கு மாரியம்மன் கோவிலில் சாமி வல்லத்து காளி அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. அந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story