ஆடி மாத 2-வது வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


ஆடி மாத 2-வது வெள்ளியையொட்டி  அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆடி மாத 2-வது வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல்

பரமத்திவேலூர்:

ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி பரமத்திவேலூர் பேட்டை, புதுமாரியம்மன், வேலூர் மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பேட்டை பகவதியம்மன் மற்றும் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை‌ சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு சாமிக்கு படைக்கப்பட்ட கூழ் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story