கோனேரிப்பட்டி காமாட்சி அம்மன் கோவில் திருவிழா கிடா விருந்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்பு


கோனேரிப்பட்டி   காமாட்சி அம்மன் கோவில் திருவிழா  கிடா விருந்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்பு
x

கோனேரிப்பட்டி காமாட்சி அம்மன் கோவில் திருவிழா கிடா விருந்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்பு

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் வழிபாடு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் நேற்று முன்தினம் சக்தி அழைப்புடன் திருவிழா தொடங்கியது. பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இதையடுத்து சுமங்கலிகளுக்கு மாங்கல்ய கயிறு மற்றும் மஞ்சள் கொம்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று காலையில் கோவிலில் இருந்து நந்தவனத்திற்கு சக்தி அழைத்தல் நடந்தது. மதியம் மகா பூஜையுடன் அம்மனுக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராசிபுரம் மற்றும் கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தை சேர்ந்த ஆண்கள், சிறுவர்கள் மட்டுமே கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். கிடா விருந்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சாப்பிட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) மறுபூஜை விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் செய்திருந்தனர்.


Next Story