குள்ளம்மன் கோவில் கலசாபிஷேக விழா


குள்ளம்மன் கோவில் கலசாபிஷேக விழா
x

குள்ளம்மன் கோவில் கலசாபிஷேக விழா

திருப்பூர்

குண்டடம்

தாராபுரத்தை அடுத்துள்ள தாசா்பட்டியில் பிரசித்தி பெற்ற குள்ளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 6-ம் ஆண்டு தொடக்க கலசாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை சரவண சிவாச்சாாியாா் நடத்தி வைத்தாா். அதன்படி காலை 9.15 மணிக்கு மகா கணபதி, பாலமுருகன் சாமிகளுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் குள்ளம்மனுக்கு நவகலசாபிஷேகம் செய்யப்பட்டது. அதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக 20-ந்தேதி இரவு சங்கிலி கருப்பண்ணசாமி வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை குள்ளம்மன்புதூா் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.


1 More update

Next Story