அம்மன் வீதிஉலா
கடையம் அருகே காளியம்மன் கோவில் கொடை விழாவில் அம்மன் வீதிஉலா நடந்தது.
தென்காசி
கடையம்:
கடையம் அருகே லெட்சுமியூரில் காளியம்மன் கோவில் கொடை விழா கடந்த 24-ந் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கும்மி பாட்டு, திருவிளக்கு பூஜை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் காலை பாபநாசத்தில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. நேற்று அதிகாலை சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளியதும் வீதி உலா நடந்தது. மதியம் கிடா வெட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story