அம்மாபேட்டை பகுதியில்தை பொங்கலையொட்டி உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்;போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை


அம்மாபேட்டை பகுதியில்தை பொங்கலையொட்டி உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்;போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை
x

அம்மாபேட்டை பகுதியில் தை பொங்கல் பண்டிகையையொட்டி உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை பகுதியில் தை பொங்கல் பண்டிகையையொட்டி உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

வெல்லம் தயாரிப்பு

தை பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்று பொதுமக்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். இதற்கு கரும்பு, பச்சரிசி உள்ளிட்ட பொருட்களுடன் வெல்லமும் முக்கியத்துவம் பெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானி, அறச்சலூர், முள்ளாம்பரப்பு, கோபிசெட்டிபாளையம், கவுந்தப்பாடி உள்பட பல்வேறு இடங்களில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ள தோட்டங்களில் கரும்பு ஆலைகளை வைத்து விவசாயிகள் வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வெல்ல தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பொங்கல் பண்டிகையையொட்டி உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உற்பத்தி செலவு அதிகம்

இங்கு தயாரிக்கப்படும் உருண்டை வெல்லம் ஈரோடு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வருத்தம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து காடப்பநல்லூரை சேர்ந்த விவசாயி சிவலிங்கம் என்பவர் கூறியதாவது:-

உருண்டை வெல்லம் உற்பத்தி செய்ய கிலோவுக்கு ரூ.45 முதல் ரூ.50 வரை செலவாகிறது. ஆனால் விற்பனை விலை ரூ.40 முதல் ரூ.42 வரை மட்டுமே கிடைக்கிறது. ஆட்கள் கூலி, மூலப்பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றின் காரணமாக உற்பத்தி செலவு அதிகமாகிறது.

அரசு நேரடி கொள்முதல்

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் வெளிமாநிலங்களில் இருந்து வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்ததுபோக மீதம் தேவைக்கு வேண்டுமென்றால் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து இருக்கலாம். இதனால் நாங்கள் உற்பத்தி செய்த வெல்லம் தேக்கம் அடைந்து விலை குறைவாக விற்பனையானதால் நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது.

இந்த ஆண்டு நாங்கள் கோரிக்ைக வைத்து இருந்ததால், எங்களிடம் இருந்து வெல்லம் கொள்முதல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் தமிழக அரசு சர்க்கரையை வழங்குவதாக அறிவித்து இருப்பது கவலை அளிக்க வைத்துள்ளது. எனவே வெல்லதை அரசு நேரடியாக கொள்முதல் செய்து பொது வினியோகத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Related Tags :
Next Story