அம்மாபேட்டைமீனாட்சி உடன் சொக்கநாதர் கோவில் கும்பாபிஷேகம்நாளை நடக்கிறது


அம்மாபேட்டைமீனாட்சி உடன் சொக்கநாதர் கோவில் கும்பாபிஷேகம்நாளை நடக்கிறது
x

நாளை நடக்கிறது

ஈரோடு

அம்மாபேட்டை காவிரி கரையில் அமைந்துள்ளது மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவில். இக்கோவில் மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதாகவும் அமைந்துள்ளது. இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து தற்போது யாகசாலை அமைத்தல், கோவிலுக்கு கோபுரங்கள் அமைத்தல், வர்ணம் தீட்டு்தல் உள்ளிட்ட பல பணிகள் நடந்து வந்தது. இப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இரவு முதல் யாக வேள்வி பூஜைகள் தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) யாக வேள்வி பூஜைகள் நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளித்து அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.


Next Story