அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

மின்கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகரில் ஒருங்கிணைந்த மாவட்ட அ.ம.மு.க. சார்பில் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை நிலைய செயலாளரும், நெல்லை மண்டல பொறுப்பாளருமான மாணிக்கராஜா தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் கே.கே. சிவசாமி முன்னிலை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மணி மலர், காளிமுத்து, சந்தோஷ் குமார், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story