அ.ம.மு.க. மாநில நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் வரும் 28-ந்தேதி முதல் ஆலோசனை


அ.ம.மு.க. மாநில நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் வரும் 28-ந்தேதி முதல் ஆலோசனை
x

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சி பணிகள் குறித்த, ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சி பணிகள் குறித்த, மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டை தலைமைக் கழக அலுவலகத்தில் டிசம்பர் 28-ந் தேதி காலை 9 மணியளவில் தொடங்கி, கீழ்காணும் விவரப்படி நடைபெறவுள்ள இக்கூட்டங்களில் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று ஆலோசனை வழங்க இருக்கிறார்.

இக்கூட்டங்களில் அந்தந்த வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், கழக அமைப்பு செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் மாநில செயலாளர்கள், கழக செய்தி தொடர்பாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 28-ந்தேதி-தேனி, சிவகங்கை மாவட்டத்தினர் பங்கேற்கிறார்கள். 29-ந் தேதி-மதுரை, ஜனவரி 6-ந்தேதி-புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஜனவரி 8-ந்தேதி-விருதுநகர், திருநெல்வேலி மாவட்டத்தினரும் கலந்து கொள்கிறார்கள். அடுத்த மாதம் 10-ந் தேதி-தென்காசி, தூத்துக்குடி, 21-ந்தேதி-தஞ்சாவூர், 27-ந்தேதி-நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், 30-ந்தேதி-பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தப்படுகிறது. பிப்ரவரி 4-ந்தேதி-திருச்சி, 7-ந்தேதி-கடலூர், 12-ந்தேதி-கோவை, 15-ந் தேதி-சேலம் நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள். பிப்ரவரி 19-ந்தேதி-சென்னை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நடக்கிறது. மார்ச் 1-ந்தேதி-ராணிப்பேட்டை, வேலூர், 4-ந் தேதி-விழுப்புரம், கள்ளக்குறிச்சி, 6-ந்தேதி-ஈரோடு, 7-ந் தேதி-செங்கல்பட்டு, காஞ்சிபுரம், 10-ந்தேதி-நாமக்கல், நீலகிரி, 12-ந் தேதி-திண்டுக்கல், 14-ந் தேதி-திருப்பத்தூர், திருவண்ணாமலை, 17-ந்தேதி திருப்பூர், 19-ந்தேதி-திருவள்ளூர், 21-ந்தேதி-கிருஷ்ணகிரி, தருமபுரி, 23-ந்தேதி-கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.


Next Story