விவசாயம் செய்வது கேள்விக்குறி?


விவசாயம் செய்வது கேள்விக்குறி?
x

அமராவதி அணையில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயம் செய்வது கேள்விக்குறி?

திருப்பூர்

தாராபுரம்

தென்மேற்கு பருவமழை தொடங்கி இரண்டு மாத காலமாகியும் அமராவதி அணையில் இருந்து விவசாயத்திற்கு பொது பணித்துறையினர் தண்ணீர் திறக்காததால் இந்த ஆண்டு விவசாய தொழில் கேள்விக்குறியாக உள்ளது.

கரூர் மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களை வளப்படுத்தும் காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்று அமராவதி ஆறு.இந்த ஆற்றுக்கு தண்ணீர் திறக்க உடுமலை அருகே அமராவதி நகரில் 90அடி உயரம் கொண்ட அணை கட்டப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் தென் மேற்கு பருவமழையால் அமராவதி அணை நிரம்புகிறது. அணையில் தண்ணீர் நிரம்பும் தண்ணீரை பொதுப்பணித்துறையினர் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு திறக்கும் தண்ணீர் உடுமலை வழியாக மடத்துக்குளம், தாராபுரம், சின்னதாராபுரம் கரூர் வரை சுமார் 182 கிலோ மீட்டர் தூரம் சென்று தாராபுரம், சின்னதாராபுரம் பகுதி வழியாக பாய்ந்து கரூர் அருகே காவிரியுடன் கலக்கிறது.

அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரை கொண்டு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்னறை லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் மஞ்சள், கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பணப்பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம்.அந்த வகையில் அமராவதி அணையில் இருந்து விவசாயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் தண்ணீர் திறக்க வேண்டிய பொதுப்பணித்துறையினர் செப்டம்பர் மாதம் நிறைவடையும் நிலையில் கூட தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு அமராவதி அமராவதி ஆற்றை நம்பி விதை நெல் பயிர் செய்ய விவசாயிகள் என்ன செய்வது என புரியாத திகைப்பில் உள்ளனர்.இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்த விட வேண்டியது பொதுப்பணி துறையின் கடமையாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டு காலமாக தென்மேற்கு பருவமழை பெய்த போது முன்கூட்டியே அமராவதி அணை நிரம்பி வழித்தது.அதனால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை சரியாக கை கொடுக்காததால் தற்போது அணையின் நீர்மட்டம் 63 அடி மட்டுமே உள்ளது. இதனை நம்பி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க இப்போது வாய்ப்பு இல்லை என தெரிய வருகிறது. எனவே பருவமழை கை கொடுத்தால் மட்டுமே அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். விவசாயிகள் இந்த ஆண்டு பயிர் செய்ய முடியாமல் தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



Next Story